Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. ஆதார் நகலை எங்கும் கொடுக்கக் கூடாது….. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை…..!!!!

இந்தியாவில் தனிமனித அடையாள ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆதார் கார்டு மிகவும் அவசியம். சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்து விஷயங்களிலும் ஆதார் கார்டு இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படி முக்கிய ஆவணமாக திகழும் ஆதார் கார்டை வைத்து நிறைய பேர் மோசடி செய்து வருகின்றனர். நம்முடைய ஆதார் கார்டை நமக்கே தெரியாமல் திருடி மோசடி செய்யவும் அதிகம் வாய்ப்புள்ளது. அதனைப்போலவே ஆதார் கார்டு ஜெராக்ஸ் எடுப்பதற்கும் வேறு ஏதாவது காரணத்திற்காகவும் பல்வேறு இடங்களில் விட்டுவிடுவோம்.

இது ஒரு சில சமயங்களில் நமக்கு ஆபத்தாக முடிய அதிக வாய்ப்புள்ளது. அதனால் ஆதார் கார்டு மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆவணம். இதனை மற்றவர்களிடம் கொடுக்கும்போது அதை தவறாக பயன்படுத்த அதிகம் வாய்ப்புள்ளது. தற்போது ஆதார் கார்டை வைத்து கடன் வாங்கும் வசதியும் அதிகம் உள்ளது. அது மட்டுமல்லாமல் உங்களுடைய வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடு போகும் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் ஆதார் நகலை எங்கும் கொடுக்க வேண்டாம் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஆதார் நகலை நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தும் ஆபத்து உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. தவிர்க்க முடியாத பட்சத்தில் பொது மையங்களில் ஆதாரை பதிவிறக்கம் செய்த பின் குறிப்பிட்ட கோப்பையை அழிப்பது அவசியம் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

Categories

Tech |