பராமரிப்பு பணியின் காரணமாக சென்னை சென்ட்ரல் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றது. இதுபற்றி தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோட்டயம் ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் திருவனந்தபுரம் இடையே இரவு 7.45 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் வண்டி மே 28ஆம் தேதி சனிக்கிழமை ரத்து செய்யப்படுகிறது.
மேலும் மறுமார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் வண்டி எண் (12624) திருவனந்தபுரத்திலிருந்து மே 29 ம் தேதி மாலை 3 மணிக்கு புறப்படுவது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், மொரப்பூர், காட்பாடி வழியாக செகந்திராபாத் வரை இயக்கப்பட்டு வரும் சபரி எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம் – திருச்சூர் இடையே ரத்து செய்யப்பட்டு திருச்சூரில் இருந்து செகந்திராபாத் புறப்படும். மேலும் மே 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை செகந்திராபாத் திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் ரயில் எண் (17230) திருச்சூரில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.