Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… இனி குறைந்த விலையில் வாங்கலாம்… சூப்பர் அறிவிப்பு…!!!!!!

உத்திரபிரதேசத்தில் குறைந்த விலையில் மதுபானங்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பணவீக்க பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும் மற்றொருபுறம் மது விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் விலை குறைவான மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால் அதனை வாங்குவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. டெல்லியை விட உத்திரப்பிரதேசத்தில் தான் வெளிநாட்டு பிராண்டுகளின் மதுபானங்கள் விலை குறைவாக இருக்கும். டைம்ஸ் ஆப் இந்தியா அறிக்கையின்படி உத்தரப் பிரதேச மாநில அரசு மற்றும் மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையே விலை குறைப்பு தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவுகள் வந்திருக்கின்றன.

இன்னும் சில நாட்களில் உத்திரபிரதேசத்தில் மலிவுவிலை மதுபானங்கள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் மதுபான உற்பத்தியாளர்கள் 36 பிரீமியம் பிராண்டுகளின் எம்ஆர்பி குறைந்திருக்கின்றன. இதில் அப்சல்யூட் ஓட்கா , ஜேம்சன் பாலண்டைன், கிளென்லிவெட், அபர்லர் போன்ற பிராண்டுகள் அடங்கும். இதுபற்றி மூத்த கலால் துறை அதிகாரி ஒருவர் பேசும்போது, உத்திரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் ஒரே மாதிரியான சுங்க வரிகள் மற்றும் ஒரே மாதிரியான கட்டண  அமைப்பு இருந்தபோதிலும் உத்திரப்பிரதேசத்தில் மதுபான விலை அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டு இருக்கிறது. அதனால் டெல்லிக்கு இணையான விலையில் இருக்குமாறும் உற்பத்தியாளர்களிடம் கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறது.

இதன் விளைவாக விலைகள் ஒரே அளவில் குறைக்க பட்டிருக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் என தெரிவித்துள்ளார். மேலும்  ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உத்தரப்பிரதேசத்தில் இறக்குமதி செய்யப்பட்ட இடங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அடுத்த சில நாட்களில் நிலைமை இயல்புக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்பின் மக்களுக்கு மலிவு விலையில் பிரீமியம் மதுபானம் கிடைக்கும் இருந்தபோதிலும் ஜானி வாக்கரின் தாய் நிறுவனமான டியாஜியோவின் மதுபான பிராண்டுகளின் தட்டுபாடு அடுத்த சில தினங்களுக்கு தொடரும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |