பிரேசில் நாட்டில் பலத்த மழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை 35 ஆக அதிகரித்திருக்கிறது.
பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் சமீப நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டித் தீர்த்து வருகிறது. எனவே அங்கு பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கி விட்டது. பெர்னாம்புகோ, அலகோவாஸ் போன்ற மாகாணங்களில் கடும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, தற்போது வரை 35 நபர்கள் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல நபர்கள் பலத்த காயமடைந்திருக்கிறார்கள். 5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த மக்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் ராணுவத்தினரும் மீட்டு வருகிறார்கள். மழை தொடர்ந்து கொட்டி தீர்த்து கொண்டிருப்பதால், வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கக்கூடிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.