Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

5 நாட்களாக குளத்தில் சுற்றி திரிந்த பெண்…. காப்பகத்தில் சேர்த்த களப்பணியாளர்கள்…. குவியும் பாராட்டுகள்….!!

குளத்தில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட களப்பணியாளர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள மணக்கரை கிராமம் பகுதியில் வெட்டுக்குளம் உள்ளது. கடந்த 5 நாட்களாக இந்த குளத்துக்குள் 35 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த 5 நாட்களாக தண்ணீரில் அங்கும், இங்கும் சுற்றி வந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் அவரை குளத்தில் இருந்து வெளியே வரும்படி கூறினர். ஆனால் அந்த பெண் குளத்தைவிட்டு வெளியேற மறுத்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணை ஊராட்சி செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட சிலர் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில் அந்த பெண்ணிடம் கிராம மக்கள் விசாரித்தனர். அப்போது அவருக்கு ஊர், பெயர் விவரங்கள் குறித்து கூற தெரியவில்லை.

இதுகுறித்து கிராம மக்கள் 181 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தமிழக அரசின் சமூகநலத்துறையின் கீழ் இயங்கும் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்துக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணை திருவாரூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவ பரிசோதனைக்கு பின் அந்த பெண்ணை திருவாரூர் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை சேர்ந்த களப்பணியாளர்கள் திருவாரூரில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். இந்நிலையில் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மைய பொறுப்பாளர் ராஜேஸ்வரி, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆகியோரை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Categories

Tech |