ஒரு வீடு கட்ட வேண்டுமென்றால் குறைந்தது 6 மாதங்கள் முதல் 1 வருடங்கள் வரை ஆகும். அதாவது வீட்டின் அளவைப் பொருத்து வீட்டின் வேலைகள் முடிவடையும். இந்நிலையில் சீனாவில் 10 மாடி கட்டிடம் 28 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்று சொன்னால் நம்ப முடியுமா? அதாவது சீனாவில் இருக்கும் ஒரு பிரபல கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி pre fabricated construction முறையை பயன்படுத்தி 10 மாடி கட்டிடத்தை கட்டியுள்ளனர்.
அதாவது ஒரு கட்டமைப்பின் பல்வேறு கூறுகளை உற்பத்தி செய்யும் இடத்தில் ஒன்று சேர்ப்பது மற்றும் அந்த துணை கூட்டங்களை கட்டுமான பணியிடத்தின் இடத்திற்கு கொண்டு செல்வது முன் தயாரிக்கப்பட்ட கட்டுமானம் [pre fabricated construction] என சொல்லப்படுகிறது. இந்த முறையை பயன்படுத்தி தான் அந்த 10 மாடி கட்டிடத்தை சீனாவில் 28 மணிநேரத்தில் கட்டி முடித்துள்ளனர்.