நாம் பொதுவாக வீட்டில் பொழுது போக்குவதற்காக டிவி அல்லது மொபைலை பார்ப்போம். இந்நிலையில் டிவி பார்க்கும் போது விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும். அதில் பிரபல கார் நிறுவனங்களின் விளம்பரங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் எத்தனையோ பிரபல நிறுவனங்கள் தங்களுடைய கார் விளம்பரங்களை ஒளிபரப்பும் போது Lamborghini Ferrari Car நிறுவனத்தின் விளம்பரங்களை மட்டும் நாம் பார்த்திருக்க மாட்டோம்.
ஏனெனில் அந்த நிறுவனம் தங்களுடைய கார் விளம்பரங்களை டிவியில் ஒளிபரப்புவது இல்லை. இதுகுறித்து அந்த நிறுவனத்திடம் கேட்ட போது எங்களுடைய கார் ஒரு சொகுசு கார் என்றும், எங்கள் நிறுவனத்தின் பெயரே எங்கள் காரை விற்பனை செய்வதற்கு போதுமானது என்றும் கூறினர். மேலும் எங்கள் காரை வாங்க தகுதியுள்ளவர்கள் யாரும் டிவியின் முன்பு அமர்ந்து நேரத்தை வீணடிக்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளனர்.