Categories
செய்திகள் தமிழ் சினிமா

“திருமணம் முடிந்த சில நாட்களிலேயே டிவி நிகழ்ச்சியில் பங்கேற்கும் நிக்கி”…. அப்ப படத்தில்….? சந்தேகத்தில் ரசிகர்கள்…..!!!!!

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே டிவி நிகழ்ச்சியில் நிக்கி கல்ராணி நடுவராக பங்கேற்க உள்ளார்.

2014ஆம் வருடம் வெளியான டார்லிங் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் தந்தார் நிக்கி கல்ராணி. இவர்  ஜீவா, விஷ்ணு விஷால், ஜிவி பிரகாஷ், ஆதி போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். நிக்கி கல்ராணி யாகவராயினும் நாகாக்க, கலகலப்பு-2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மரகதநாணயம், ஹர ஹர மஹாதேவகி, ராஜவம்சம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். யாகவராயினும் நாகாக்க, மரகதநாணயம் திரைப்படத்தில் ஆதியுடன் இணைந்து நடித்த போது நிக்கிக்கும் ஆதிக்கும் காதல் மலர்ந்துள்ளது.

ஆனால் இதை பற்றி இவர்கள் வெளியே கூறவில்லை. அண்மையில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதை தொடர்ந்து திருமணத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் திருமணம் சென்னையில் நடைபெற இருப்பதாக செய்தி வெளியானது. இவர்களின் திருமணமானது மே 18ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நடக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படியே நிக்கிக்கும் ஆதிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் திருமணம் முடிந்த சிறிது நாட்களிலேயே நிக்கி கலர்ஸ் தமிழில் நடைபெறும் வெல்லும் திறமை என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க இருக்கின்றார். படங்களில் நடித்து வந்த நிக்கி தற்பொழுது டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால் ரசிகர்கள் இனி அவர் திரைப் படங்களில் நடிப்பாரா என சந்தேகத்தில் இருக்கின்றார்கள்.

Categories

Tech |