Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரஷ்யாவிலிருந்து கூடங்குளத்திற்கு சிறப்பு விமானம் மூலம் கொன்டுவரப்பட எரிபொருள்…. தீவிர பாதுகாப்பு பணி …!!!!!!!

ரஷ்யாவில் இருந்து மூலப்பொருள்  கொண்டுவரப்பட்டுள்ளது.

திருநெல்வேலி  மாவட்டத்தில் உள்ள  கூடங்குளத்தில் அணுமின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் தற்போது 5-வது மற்றும் 6-வது அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2- வது அணு உலை எரிபொருள் நிரப்புவதற்கும், வருடாந்திர பராமரிப்பு பணிக்காகவும்  கடந்த மார்ச் மாதம் முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து முதலாவது அணு உலையில் மட்டும் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

இதற்கு மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் யுரேனியம் எரிபொருள் ரஷ்யாவிலிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பலத்த பாதுகாப்புடன் 4 லாரிகளில்   அணுமின் நிலையத்திற்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து  கொண்டுவரப்பட்ட யுரோனியம் பாதுகாப்பாக 3 அடுக்கு பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |