மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் அன்று தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்து வருகின்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தங்கள் குறைகளை மனுக்களில் எழுதி தந்துவிட்டு செல்வர். இதில் வாரத்திற்கு இரண்டு பேராவது மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் எடுத்து வந்து தீக்குளிக்க முயற்சி செய்கின்றார்கள்.
தீக்குளிக்க முயற்சிப்பவர்கள் போலீசார் வருவதற்கு முன்பாகவே ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து விடுகின்றார்கள். கண்காணிப்பு போலீஸ் அலுவலக நுழைவாயில் மற்றும் போர்டிகோ பகுதியில் மட்டுமே நிற்கின்றார்கள். மற்ற இடங்களில் பெயரளவிலேயே இருக்கின்றார்கள். இதனால் மற்ற வழியாக தீக்குளிக்க முயல்வார்கள் உள்ளே வந்து விடுகின்றார்கள். ஆகையால் இதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருகின்றனர்.