மரண கிணற்றில் பைக் ஓட்டி இளம்பெண் சாதனை படைத்துள்ளார்.
இந்தோனேசியா நாட்டில் 23 வயதுடைய பெண் ஒருவர் மரண கிணற்றில் பைக் ஓட்டி சாதனை படைத்தார். அந்தப் பெண்ணின் பெயர் கமலா புர்பா ஆவார். அந்தப் பெண் மரத்தால் செய்யப்பட்டுள்ள மரணக்கிணற்றின் சுவரில் புவியீர்ப்பு விசைக்கு எதிராக பைக்கை வேகமாக ஓட்டி சென்றுள்ளார்.
இந்த சாகச விளையாட்டு திருவிழாவின் போது நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து சாகச பயிற்சி ஆரம்பித்த போது அங்கு பெண்கள் யாரும் இல்லாததால் இது வித்தியாசமாக இருந்ததாகவும் யாரும் செய்யாத ஒன்றை செய்ய விரும்பியதாகவும் கமலா தெரிவித்துள்ளார்.