Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உன் கூடலாம் வாழ முடியாது….. உடன் வர மறுப்பு…. மனைவிக்கு கத்தி குத்து….. கணவன் கைது…!!

சென்னை  அருகே சேர்ந்து  வாழ மறுத்த மனைவியை கணவன் கத்தியால் சரமாரியாக  குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,

சென்னை ஆலந்தூர் பகுதியை அடுத்த மேற்கு தாம்பரம் திருவள்ளுவர் புரத்தைச் சேர்ந்தவர் சரத். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி துர்கா. இவர்கள் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் திருமணம் நடைபெற்று ஓர் ஆண்டுகளுக்குள்ளேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2019யில் சரத்தை விட்டு பிரிந்து வந்து வாழத் தொடங்கிய துர்கா, விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் நாடியிருந்தார்.  இதையடுத்து நேற்றைய தினம் பள்ளிக்கரணையில் தனது மனைவி துர்காவை சந்தித்த சரத் விவாகரத்து வேண்டாம் சேர்ந்து வாழலாம் எனக்கு உன்னுடன் வாழ ஆசையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு மறுத்ததோடு அவர் சரத்தை கடுமையாக பேசியதால் ஆத்திரமடைந்த அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தினார். இதுகுறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த அதிகாரிகள் படுகாயமடைந்த பெண்ணை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, பின் சரத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |