Categories
மாநில செய்திகள்

மறந்துடாதீங்க…! இதற்கு விண்ணப்பிக்க நாளையே(31.5.22) கடைசி தேதி…. முக்கிய அறிவிப்பு…..!!!!

முழுமையான இரட்டை இடைநிலைப் படிப்புகளான பிஏ, பிஎஸ்சி, பிஎட் மற்றும் பிகாம் b.ed போன்றவற்றை உள்ளடக்கிய நான்கு வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பல்முனை கல்வி நிறுவனங்களில் ஆரம்பத்தில் இது செயல்படுத்தப்படும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2030ஆம் ஆண்டிற்குள் நீடித்த வளர்ச்சியை எட்டுவதற்கான செயல் திட்டத்தை நிறைவேற்றுவதற்கேற்ப மத்திய அரசு கடந்த ஆண்டு தேசிய கல்வி கொள்கை 2020 க்கு ஒப்புதல் அளித்தது. மேலும் இந்த தேசிய கல்வி கொள்கை 2020 ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தின் மூலமாக மட்டுமே 2030ஆம் ஆண்டில் இருந்து ஆசிரியர் செயல்பாடுகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

தற்போதுள்ள 5 வருட திட்டத்துடன் ஒப்பிடும்போது நான்கு வருடங்களிலேயே இந்த கல்வி நிறைவடைந்தால் மாணவர்களுக்கு ஒரு வருட மிச்சமாகும். மேலும் 2022 – 23 ஆம் கல்வி ஆண்டில் இருந்து நான்கு வருட ஒருங்கிணைந்த ஆசிரியர்  கல்வித்திட்டம் தொடங்கும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்து ஆசிரியர் கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க (BA.B.Ed,Bsc.BEd,and Bcom.BEd) மத்திய கல்வி அமைச்சகம்(NCTE) அழைப்பு விடுத்து இருக்கின்றது. இந்த படிப்புகளில் இணைவதற்கான நுழைவுத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்த இருக்கிறது. மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள் நிறுவனங்கள் நான்கு ஆண்டு பயிற்சியை கற்பிக்க ஆன்லைன் விண்ணப்பத்தை மே 31-ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://ncte.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |