சென்னை மேயர் பிரியா ராஜன் நேற்று இரவு சைக்கிள் பேரணியின்போது சைக்கிள் ஓட்டிய சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. முன்னதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்ட செய்தி குறிப்பில், பெண்கள் பாதுகாப்பு என்பது அவர் அனைவரின் பாதுகாப்பு இதை உணர்த்தும் விதமாக சிங்காரச் சென்னை 2.0 வீதிகளில் நிகழ்வின் ஒரு பகுதியாக “பாதுகாப்பான சென்னை” என்ற கருத்தை வலியுறுத்தி சில விஷயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதன்படி பெண்களுக்கான இரவு நேரம் சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சியானது நேற்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனையடுத்து பிரியா ஒரு சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். அப்போது சைக்கிளில் பிரேக் இல்லை என்று கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிகாரிகள் பதறிப் போயினர். பின்னர் மேயர் பிரியா மெதுவாக ஓட்டிச் சென்று சமாளித்துக் கொண்டார். அவருடன் அதிகாரிகள் சிலரும் சென்றனர். மேலும் ஏராளமான பெண்கள் சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டனர் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.