தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து வருகின்ற ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு மூலமாக 7,382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவையாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் இருக்கும் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் குரூப்-4 தேர்வு எழுத பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதால் இந்த தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். குறிப்பாக தமிழகம் முழுவதும் சுமார்21 லட்சம் பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4, விஏஓ தேர்வுக்கான இலவச பாடநூல் தொகுப்பு வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்தால் அனுப்பி வைக்கப்படும் என ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி தெரிவித்துள்ளது. பாட நூல்களைப் பெற விரும்புபவர்கள் TNPSC GROUP-IV TEXT BOOKS என்று டைப் செய்து, தங்கள் முழு முகவரியுடன் 9176392791என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பிய முன்பதிவு செய்யவும்.முன்பதிவு செய்த அனைவருக்கும் டிஎன்பிஎஸ்சி பாடநூல்கள் பிடிஎஃப் வடிவில் வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.