Categories
பல்சுவை

என்ன? கோகோ கோலா கிடைக்காதா…. இப்படிக்கூட ஒரு நாடு இருக்குதா….?

கி.பி 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியாவில் இருக்கும் அட்லாண்டாவில் ஜான் ஸ்டித் பெம்பர்டன் என்பவரால் கோகோ கோலா கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோகோ கோலா 20 மற்றும் 21-ம் நூற்றாண்டில் உலக அளவில் உள்ள அனைத்து சந்தைகளிலும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் உலகம் முழுவதிலும் கோகோ கோலா கிடைத்தாலும் 2 நாடுகளில் மட்டும் கோகோ கோலா கிடைக்காது.

அதாவது வட கொரியா மற்றும் கியூபா நாட்டில் கோகோ கோலா கிடைக்காது. ஏனெனில் வட கொரியா மற்றும் கியூபா நாடுகளின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவில் தயாரிக்கப்படும் எந்த பொருட்களும் கியூபா மற்றும் வட கொரியாவில் விற்பனை செய்யப்படுவதில்லை. இதனால்தான் கோகோ கோலாவும் அந்த நாடுகளில் கிடைப்பதில்லை.

Categories

Tech |