கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து பெண் சிசுவாக இருந்தால் கருவை கலைக்கும் சட்டவிரோத செயல் நாட்டின் சில பகுதிகளில் இன்றளவும் கூட தொடரும் சோக கதையாக இருக்கின்றது. கிராமப்புற பகுதிகளில் பெரும்பாலான குடும்பங்கள் ஆண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து வருகின்ற நிலையில் குழந்தைகளை தத்தெடுக்கும் பெற்றோர் பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து வருவது புள்ளிவிவரங்களில் தெரிய வந்திருக்கின்றது.
இந்த சூழல் பெரும் ஆறுதல் அளித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். எனினும் கிராம பகுதிகளில் குழந்தைகள் தத்தெடுப்பு சமூக ரீதியில் இன்னும் போதிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கின்றனர். இத்தகைய சூழ்நிலை மாற வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர்கள் குழந்தைகள் தத்தெடுப்பு மக்களிடையே அதிக அளவில் பிரபலப்படுத்துவதற்கு அரசு பல ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.