Categories
சினிமா

ரஜினியை சந்தித்து பேசிய கமல், லோகேஷ்….. வைரலாகும் புகைப்படம்… எதற்காக இந்த சந்திப்பு?…..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமலஹாசன். இவர் தற்போது நடித்து முடித்துள்ள விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் கமல் படத்தை விளம்பரம் செய்யும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறார். அதன்படி போயஸ் கார்டனுக்கு சென்று ரஜினிகாந்தை சந்தித்து பேசியிருக்கிறார். மேலும் அவருடன் லோகேஷ் கனகராஜ் சென்றுள்ளார். அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை லோகேஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக லோகேஷ் தலைவர் 169 படத்தை கமல் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்பட்டது. கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக அந்த படவேலை முடிய வில்லை. ஆனால் அந்த பட வேலை எதிர்காலத்தில் நடக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார் இந்நிலையில் கமல் ரஜினியை சந்தித்து பேசி இருப்பதால் தலைவர் 170 படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. மேலும் தலைவர் 170 படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருக்கிறார். ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று விட்டு நாடு திரும்பியதும் நெல்சன் தீலிப்குமர் இயக்கத்தின் தலைவர் 169 படத்தில் நடிக்க உள்ளார்.

Categories

Tech |