பழம் காலம் தொட்டு சோற்றுக்கற்றாழை மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகிறது சோற்றுக் கற்றாழையில் இருக்கும் மருத்துவ குணங்கள் அளப்பரியது. அவற்றுள் முக்கியமான மருத்துவ குறிப்புகளை இந்த பதிவில் காண்போம்.
சூரிய ஒளியில் இருக்கும் புற ஊதாக் கதிர்கள் அதிக அளவில் நமது தோழில் பட்டுக் கொண்டிருக்கும் போது நம்மில் பலருக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் மற்றும் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. கற்றாழை சாறு அல்லது கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை கோடை காலங்களில் நமது மேற்புற தோலில் பூசி கொள்வதால் சரும நோய்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க முடிகிறது.
கற்றாழை எண்ணெய், அல்லது கற்றாழையுல் இருந்து கிடைக்கும் ஜவ்வு போன்ற படலத்தை தொற்றின் மீது தடவி வருவதால் சீக்கிரம் மாறுவதோடு மட்டுமல்லாமல் அழுத்தமான தழும்புகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
பெண்கள் அனைவருமே தங்கள் முகத்தோற்றம் பொலிவுடன் இருக்க இன்றைய காலத்தில் தீமை உண்டாகும் ரசாயனங்கள் அதிகம் உள்ள அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தோல் நீக்கிய கற்றாழை துண்டை நன்கு அரைத்து முகம் முழுவதும் பூசிக்கொண்டு கால் மணி நேரம் அல்லது அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகத்தில் இருக்கும் எண்ணெய்த்தன்மை நீங்கி முகம் பொலிவு பெறும். அதோடு முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும்.
தோல் நீக்கிய கரித்துண்டுகளை சிறிதளவு மென்று சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும் பற்களில் சொத்தை ஏற்படுத்தும் கிருமிகளை அழிப்பதிலும் கற்றாழை உதவுகிறது.