Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

செங்கல் சூளை உரிமையாளர் வெட்டிக் கொலை… உறவினர்கள் சாலை மறியல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

செங்கல் சூளை உரிமையாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொலையாளியை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

தர்மபுரி மாவட்டம், பெரும்பாலை அருகில் சின்னம்பள்ளி கோவள்ளி கோம்பை பகுதியில் வசித்து வந்தவர் செங்கல் சூளை உரிமையாளர்கள் கந்தசாமி (53). அதே பகுதியில் வசித்த 30 வயதுடைய விவசாயி குபேந்திரன். இவருக்கும் கந்தசாமிக்கும் இடையே பொது வழித்தடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதுகுறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இரு தரப்பினருக்கு இடையே உடன்பாடு ஏற்படாமல் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கந்தசாமி பால் ஊற்றுவதற்கு பைக்கில் சின்ன பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது கோம்பை அருகில் செல்லும் போது குபேந்திரன் கந்தசாமியை வழிமறித்தார். அதன்பின் தான் பதுக்கி வைத்திருந்த அரிவாளை எடுத்து கந்தசாமியை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். இதில் படுகாயம் அடைந்த கந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதற்கிடையில் கந்தசாமியின் உறவினர்கள் கொலையாளியை கைது செய்ய வேண்டும் என்று பொன்னகரம் – மேச்சேரி ரோட்டில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரராஜன், இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கொலை செய்தவரை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதிக் கொடுத்தனர்.

இதனை அடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின் காவல்துறையினர் கந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இந்த கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் குபேந்திரன் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |