செங்கல்பட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில இளைஞர் சக நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியை அடுத்த மாம்பாக்கம் கொளத்தூர் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ப்ரேன் கூர்மி இவ்வாறு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர். இங்கே காயாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வசிக்கும் அறையில் இவருடன் சேர்த்து நான்கு வாலிபர்கள் தங்கியுள்ளனர். அதன்படி,
நேற்று முன்தினம் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் அறையில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது பிரேன் கூர்மிக்கும் , பிரோதிப் என்ற மற்றொரு வடமாநிலத்தவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு திடீரென கைகலப்பாக மாறியது. தகராறு முற்றவே பிரோதிப், ப்ரேன் கூர்மியின் கழுத்தில் கத்தியால் குத்தி தப்பி சென்றுவிட்டார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவரை சக நண்பர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதையடுத்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் பிரோதிப் தான் குற்றவாளி என்பது தெரிந்ததையடுத்து அவரை தேடி வந்த காவல்துறையினர், நேற்றையதினம் காட்டில் பதுங்கியிருந்த அவனை கைது செய்து விசாரிக்கையில், வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டதில் ப்ரேன் கூர்மி என் மீது அமர்ந்து முகத்தில் பலமாக தாக்கினார். அதில் வலி தாங்க முடியாமல் அருகில் இருந்த கத்தியை எடுத்து கூர்மியை குத்தி விட்டேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.