கடந்த ஜனவரி மாதம் யுபிஎஸ்சி எழுத்துத் தேர்வும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நேர்காணலும் நடைபெற்ற நிலையில் , தற்போது இறுதி முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்கள் ஐஏஎஸ், ஐ எஃப் எஸ், ஐபிஎஸ் மற்றும் மத்திய அரசின் ஏ & பி பிரிவு பணிகளில் அமர்த்தப்படுவார்கள். இந்த தேர்வில் தேசிய அளவில் சுதிர் ஷர்மா முதலிடமும், 42வது இடம் பிடித்த சுவாதி ஸ்ரீ தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.
ஆணையத்தின் www.upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையளத்தில் காணலாம். யுபிஎஸ்சி நுழைவு தேர்வு முடிவுகளை அருகிலுள்ள உதவி மையத்தை நாடியும், 011-23385271/011-23381125 / 011-23098543 என்ற எண்களுக்கு போன் செய்தும் தெரிந்துகொள்ளலாம். வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.