Categories
உலக செய்திகள்

“நீங்க எல்லாரும் இறக்கப்போறீங்க”…. ஆரம்பப்பள்ளியில் நடந்த தாக்குதல்…. சிறுவன் கூறிய அதிர்ச்சி தகவல்…!!!

அமெரிக்க பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிர் பிழைத்த சிறுவன் தாக்குதலுக்கு முன் நீங்க எல்லோரும் இறக்கக்கப்போகிறீர்கள் என்று கொலையாளி கூறியதாக தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவில் இருக்கும் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ராப் என்னும் ஆரம்பப்பள்ளியில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டிருக்கிறது. எனவே, அந்த பள்ளியின் ஒரு வகுப்பறையில் இருந்த ஆசிரியை கதவை உடனடியாக பூட்டிவிட்டு, மேஜையின் அடியில் மறைந்து கொள்ளுமாறு மாணவர்களிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மேலும் அந்த ஆசிரியை தெரிவித்ததாவது, இது வழக்கமாக பள்ளிகளில் நடக்கும் ஆக்டிவ் ஷூட்டர் ஸ்டில்ஸ் பயிற்சி கிடையாது என்று அறிந்து விட்டேன். அமைதியாக இல்லையெனில் நாங்கள் உயிரிழந்துவிடுவோம். பிற வகுப்பறைகளிலிருந்து காயமடைந்த குழந்தைகளின் கதறல் சத்தம் கேட்டது.

உடனே எங்கள் வகுப்பின் மாணவிகளும் அழுதனர். அவர்களுக்கு ஆறுதல் கூற முயற்சித்தேன். அதற்குள் காவல்துறையினர் அனைவரையும் வெளியேற்றி விட்டனர். இந்த சம்பவம் என் வாழ்விலேயே நடந்த மிக மோசமான நிமிடங்கள் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் தப்பிய 10 வயதுடைய சாமுவேல் சாலினஸ் என்ற சிறுவன் தெரிவித்ததாவது, துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு முன் கொலையாளி, இப்போது நீங்கள் சாக போகிறீர்கள் என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து எங்களின் ஆசிரியரை சுட்டு விட்டார். அதன்பிறகு மாணவர்களை நோக்கி சுடத் தொடங்கினார். கடைசியாக என் காலில் சுட்டுவிட்டார் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |