Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில்… 3 பேர் படுகாயம்… 3 வாகனங்கள் சேதம்… போலீஸ் விசாரணை…!!!!

கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில், இரண்டு கார் மற்றும் பைக் சேதமடைந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகில் முளகுமூட்டையில் வசித்து வருபவர் 39 வயதுடைய வினோ ரெஞ்சின். இவர் கடந்த 26ம் தேதி மதியம் தனது நண்பர்களுடன் தூத்துக்குடிக்கு காரில் புறப்பட்டு சென்றார். காரை வினோ ரெஞ்சின் ஓட்டிச் சென்றார். அப்போது நாகர்கோவில் பாலத்தை கடந்து வெட்டூர்ணிமடம் வரும்போது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி எதிர்பாராதவிதமாக ரோட்டின் ஓரம் நின்று பேசிக் கொண்டிருந்த 3 பேர் மீது பயங்கரமாக மோதியது. அதோடு ரோட்டின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு கார் மற்றும் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் 2 கார், பைக் பலத்த சேதம் அடைந்துள்ளது.

மேலும் இனையம்புத்தன் துறையில் வசித்த 23 வயதுடைய ஜினோ சச்சின், 26 வயதுடைய டொனலின்,பள்ளிவிளையை சேர்ந்த 69 வயதுடைய ராஜன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மூன்று பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |