அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அதன்படி அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணம் நகரில் உள்ள பள்ளியில் கடந்த வாரம் துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயது இளைஞன் பள்ளி குழந்தைகள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியை உள்பட 21 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞனை போலீசார் சுட்டு வீழ்த்தினார்கள். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டியும், துப்பாக்கிச்சூடு கட்டுப்பாடு சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க அமெரிக்காவின் முன்னால் அதிபர் டிரம்ப் ஒரு தீர்வு கூறியுள்ளார். இதுகுறித்து ஹீஸ்டனில் நடைபெற்ற நேஷனல் ரைபிள் அசோஷியேஷனின் மாநாட்டில் பேசினார்.
அப்போது டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் ஆயுத ஏந்திய நபரின் தாக்குதலின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களை தற்காத்துக்கொள்ள எந்த வழியும் இல்லை. துப்பாக்கி சூட்டுடன் இருக்கும் தீய மனிதனை நிறுத்த ஒரே ஒரு வழி ஒரு நல்ல மனிதனின் கையில் துப்பாக்கியை கொடுப்பதுதான். ஆதுமட்டுமில்லாமல் ஒரு பள்ளிக்கு ஒரு நுழைவு பாதை மட்டுமே இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் வலுவான தடுப்பு அமைப்பு மற்றும் உலோகங்களை கண்டறியும் கருவிகள் போன்றவற்றை இருக்க வேண்டும். இது பணத்தை பற்றியது அல்ல, இது விருப்பத்தின் பற்றியது. உக்ரைனுக்க்கு அனுப்பிய அமெரிக்க 40 மில்லியன் டாலர் வழங்க முடியும் என்றால் இதையும் செய்ய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.