Categories
மாநில செய்திகள்

திமுக அரசின் பெண்களுக்கான நலத்திட்டங்கள்…. பட்டியலிட்ட ஸ்டாலின்…. என்னென்ன திட்டங்கள் தெரியுமா?…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி தேசிய தர நிர்ணயக்குழுவின் ஏ++ ப்ளஸ் தகுதி பெற்றமைக்காக நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், திராவிட முன்னேற்ற கழகம் எப்போதெல்லாம் பொறுப்பில் இருக்கிறதோ அப்போதெல்லாம் பெண்களுடைய முன்னேற்றத்திற்கும் பல்வேறு திட்டங்களை, பல்வேறு சாதனைகளை இன்றைக்கும் வரலாற்றிலே பேசக்கூடிய அளவிற்கு விளங்கி கொண்டிருக்கின்றன. இங்கே நமது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார், சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் 33% இப்போது 50%, கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம், ஆரம்ப பள்ளிக் கூடங்களில் கட்டாயமாக பெண்களை தான் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

எனவே பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என்பதற்காக தான் இந்த சுய உதவி குழு என்ற மாபெரும் திட்டத்தை கலைஞர் 1989 ஆம் ஆண்டு கொண்டு வந்து நிறைவேற்றினார். அதனைப் போலவே பெண்களுக்கு கல்லூரிக் கல்வி வழங்கிய தீர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அரசு பள்ளிகளில் படித்த கல்லூரியில் சேரும் மாணவர்கள் ரூ.1000 வழங்க கூடிய பெண்கள் கல்வி நிதி உதவி திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம். மேலும் நமது அரசைப் போலவே இந்த கல்லூரியும் பெண்களின் கல்வி உரிமைக்காக அர்ப்பணிப்போடு பாடுபட்டு வருவது மகிழ்ச்சியாக உள்ளது. அந்த மகிழ்ச்சியோடு உங்கள் அனைவரையும் பாராட்டி வாழ்த்த்துகிறேன், நன்றி தெரிவிக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |