Categories
உலக செய்திகள்

சிறுவர் பள்ளிப்புத்தகத்தில் ஆபாச ஓவியங்கள்… சீனாவில் எழுந்துள்ள சர்ச்சை…!!!

சீன நாட்டில் பள்ளி புத்தகத்தில் ஆபாசமான ஓவியங்கள் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

சீன நாட்டில் சிறுவர்களுக்கான பள்ளி பாட புத்தகத்தில் ஆபாசமான ஓவியங்கள்  அச்சிடப்பட்டிருக்கிறது. பாடபுத்தகத்தில் சிறுவர்களும் சிறுமிகளும் ஆபாசமாக இருக்கும் வகையிலான ஓவியங்களும் அமெரிக்க நாட்டின் கொடியை உடையாக அணிந்தவாறு இருக்கும் ஓவியங்களும் அச்சிடப்பட்டிருக்கிறது.

இது மட்டுமில்லாமல், மேலும் சில ஆபாசமான ஓவியங்கள் இருந்திருக்கின்றன. பாடப்புத்தகங்களை வெளியிடுவதற்கு முன்பாக சரியாக படித்து ஆய்வு செய்யாமல் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி பாட புத்தகங்களை ஆய்வு செய்யுமாறு நாட்டின் கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |