Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் வங்கி கணக்குகள் முடக்கம்…. பெரும் பரபரப்பு….!!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கஞ்சா 2.0 வழக்கில் போலீசார் முதன்முறையாக 813 வங்கி கணக்குகளை முடக்கி உள்ளனர். தமிழகம் முழுவதும் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கஞ்சா 2.0 வேட்டை அதிரடியாக நடந்து வரும் நிலையில், 10 மாவட்டங்களில் தற்போது 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதன்படி மதுரையில் 191 வங்கி கணக்குகளும், விருதுநகரில் 119 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளன. இதனைப் போலவே தேனியில் 146, ராமநாதபுரம் 56, கன்னியாகுமரி 91, திண்டுக்கல் 116 என மொத்தம் 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |