தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கு எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் அதிமுகவுக்கு 4 இடங்களும் அதிமுக இரண்டு இடங்களும் கிடைக்க உள்ளது. இதில் கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் திமுக சார்பாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். காங்கிரசுக்கு ஒதுக்கிய ஒரு இடத்திற்கு சிதம்பரம் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, அகில இந்திய செயலர் விஸ்வநாதன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ராஜ்யசபா தேர்தலில் சிதம்பரம் போட்டியிடுவார் என்று டெல்லி மேலிடம் அவருக்கும் மாநில தலைமைக்கும் வாய்மொழியாக அறிவித்தது. இதனையடுத்து ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை காங்கிரஸ் தலைமை அறிவித்த நிலையில் நேற்று சிதம்பரம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.