Categories
அரசியல்

ராஜ்யசபா தேர்தல் 2022…. மீண்டும் களமிறங்கும் நிர்மலா சீதாராமன்…. எங்கு தெரியுமா?….!!!!

தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து அந்த இடங்களை நிரப்ப ஜூன் 10ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது.  இந்நிலையில் பாஜக சார்பாக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது. அந்தக் கட்சியின் சார்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஸ் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இரண்டாவது முறையாக கர்நாடக மாநிலத்திலிருந்து மாநில வைக்க நிர்மலா சீதாராமன் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் இருந்து இந்த முறை போட்டியிட மாட்டார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அந்த தகவல்கள் அனைத்தும் தற்போது பொய்யாகி உள்ளது. மாநிலங்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் இருந்து பாஜக சார்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் போட்டியிடுகின்றார். இது கட்சி மேலிடம் எடுத்த முடிவு என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |