Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏமாற்றி திருமணம் செய்த வியாபாரி…. மனைவியின் பரபரப்பு புகார்…. கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…!!

பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்தது தொடர்பாக வியாபாரி உள்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நர்மதா என்பவர் கோவை மாநகர் மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு எனக்கும் கோவை புதூர் பகுதியைச் சேர்ந்த விவேக் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. விவேக் ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்து வந்துள்ளார். இதற்காக 2 தவணையாக விவேக் 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை என்னிடம் வாங்கினார். மேலும் எனக்கு தெரியாமல் எனது 17 பவுன் தங்க நகையை வங்கியில் அடமானம் வைத்துள்ளார்.

இந்நிலையில் விவேக் செல்போனில் வேறு ஒரு பெண்ணுடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது அவர் சரியான பதில் அளிக்கவில்லை. இதனை அடுத்து விவேக் பேசிய செல்போன் எண்ணை கண்டுபிடித்து அதனை தொடர்பு கொண்டு நான் பேசினேன். அப்போது எதிர்முனையில் பேசிய ஒரு பெண் தன்னை விவேக்கின் மனைவி என அறிமுகப்படுத்தினார். இருவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடைபெற்றுள்ளது.

அதனை மறைத்து விவேக் என்னை 2-வதாக திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. எனவே என்னை ஏமாற்றி திருமணம் செய்த விவேக், அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் லட்சுமி, சித்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பெண் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி விவேக் உள்பட மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |