நம் முன்னோர்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்டு நீண்ட ஆயுளோடு வாழ்ந்தனர். இன்றைக்கு அவசரம் அவசரமாக எதையாவது உண்டு. மருந்தே உணவு என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இன்றைய நவீன உலகில் மக்களை பல விதமான நோய்கள் ஆட்டிப்படைக்கின்றன அதில் ரத்த அழுத்தம் முக்கியமானதாகும். இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. நாம் உண்ணும் உணவே நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று உணவியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இதயத்திற்கு இதம் தரும் நிபுணர்கள் பரிந்துரைந்த உணவுகள் எவை எனப் பார்ப்போம்.
பச்சை காய்கறிகள்..
பச்சை இலைகளைக் கொண்டு கீரைகல், முள்ளங்கி இலைகள் ,பாகற்காய் போன்றவை குறைந்த கொழுப்புச்சத்தும், குறைந்த கலோரிகளையும் தரக்கூடியதாகும். நார்ச்சத்து அதிகம் கொண்ட இந்த பச்சைக் கீரைகளில் போலிக் ஆசிட் ,பொட்டாசியம்,மெக்னீசியம் போன்றவை உள்ளன பச்சைநிற காய்கறிகள் மற்றும் கீரைகளில் நிறைந்துள்ள தாதுஉப்புக்கள் இதைய நோய் ஏற்படுவதை 11 சதவீதம் குறைகிறது.
தானியங்கள்…
இதயநோயை கட்டுப்படுத்துவதில் தானியங்கள் இரண்டாவது இடம் வகிக்கின்றன அரிசி, கம்பு, கோதுமை, ராகி, சோளம், பார்லி, போன்ற தானியங்களிலும் பருப்பு வகைகளில் அதிக அளவு நார்ச்சத்தும் வைட்டமின்களும் காணப்படுகின்றன குறிப்பாக விட்டமின் டி இதயத்தைப் பலப்படுத்தவும் விட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்துக்கும் நரம்புகளின் செயலுக்கத்திற்கும் உடல் பலத்துக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
ஓட்ஸ்..
உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றும் பணியில் ஓட்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது தினமும் காலையில் ஓட்ஸ் மூலம் தயாரிக்கப்பட்ட உணவுகளை உட்கொண்டால் ரத்த நாளங்களில் படிந்துள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்கிறது இதனால் இதயநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
பாதாம் பருப்பு..
பாதாம் பருப்பு இதயத்தின் நண்பன் என்று அழைக்கின்றனர் அந்த அளவிற்கு இதில் ஒமேகா 36 எனப்படும் நல்ல கொழுப்புக்கள் நிறைந்துள்ளன. இதனால் கேட்ட கொழுப்புகள் கட்டுப்படுத்தப்படுகிறது மேலும் பாதம் பருப்பை சத்துக்களில் தங்கச்சுரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. அதிக புரதச் சத்தும் நார்ச் சத்தும் தாது உப்புக்களும் இதில் உள்ள விட்டமின் பி , மெக்னீசியம், இரும்பும், துத்தநாகச் சத்தும் ,அடங்கியுள்ளன இதனை உட்கொண்டால் இதய நோய் எட்டிப்பார்க்காது.
சோயா பீன்ஸ்..
இதய நோய் வராமல் தடுப்பதில் சோயா பீன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது பீன்ஸ் உணவுகளில் உள்ள சோபினோ வான்ஸ் எனப்படும் உயர் நார்ச்சத்துக்களை நீரிழிவு நோயையும் மாரடைப்பின் தீவிரத்தையும் குறைக்கும் தன்மை உடையது தொடர்ந்து சோயாபீன்ஸ் உணவுகளை சாப்பிட்டு வந்தால்அது கொழுப்பை குறைப்பதுடன் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவையும் கட்டுக்குள் வைக்கிறது.