Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

முட்புதரில் கேட்ட அழுகுரல் சத்தம்…. பிறந்து 2 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சூரப்பநாயக்கன் சாவடியில் இருக்கும் தனியார் பல்பொருள் அங்காடி சுற்றுச்சுவர் அருகே முட்புதரில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனால் பல்பொருள் அங்காடி ஊழியர் ஒருவர் அங்கு சென்று பார்த்த போது பிறந்து இரண்டு வாரமே ஆன பச்சிளம் குழந்தை முட்புதரில் அழுது கொண்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஒரு பையில் வைத்து துணியால் மூடி வைக்கப்பட்டிருந்த குழந்தையை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையை முட்புதரில் வீசி சென்ற தாய் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Categories

Tech |