கொல்கத்தாவில் 18 வயது மாடல் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சரஸ்வதி தாஸ் என்பவர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் இருக்கும் கஸ்பா பகுதியில் வசித்து வந்த 18 வயது மாடலாவார். இவர் ஒரு மாடலாகவும் பள்ளி குழந்தைகளுக்கு டியூஷனும் எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய படி பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சரஸ்வதி தன் பாட்டியுடன் தூங்கி கொண்டிருந்தார். இரவு இரண்டு மணியளவில் பாட்டி திடீரென எழுந்து பார்த்தபோது சரஸ்வதியை காணவில்லை. இதனால் பக்கத்தில் இருந்த அறையில் பார்த்த பொழுது தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.
18 வயதான சரஸ்வதி ஒரு பையனை காதலித்து வந்துள்ளார். மேலும் அவருடன் இரவு ஒரு மணி வரை பேசியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை சந்திப்பது குறித்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் கூட சரஸ்வதி தற்கொலை செய்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. சரஸ்வதி எந்த ஒரு கடிதமும் எழுதி வைக்கவில்லை. சரஸ்வதி ஒரு வயது குழந்தையாக இருந்தபோது அவரையும் தாயையும் தந்தை விட்டுச் சென்றுவிட்டார். இதையடுத்து தாய் மாமாவின் வீட்டில் தான் வசித்து வந்திருக்கின்றார்கள். மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் சென்ற 14 நாட்களில் இது நான்காவது தற்கொலையாக இருக்கிறது. நடிகை பல்லவி டே, மாடல், நடிகை விதிஷா மஜும்தார், மஞ்சுஷா உள்ளிட்டோர் தற்கொலை செய்து கொண்டனர் குறிப்பிடத்தக்கது.