Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பழக்கண்காட்சி நிறைவு நாள்”…. சிறந்த அலங்காரத்துக்கு சுழல் கோப்பை….!!!!!

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்ற பழக்கண்காட்சி நிறைவு நாளான நேற்று சிறந்த அலங்காரத்துக்கு சுழல் கோப்பை வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா சென்ற ஏழாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நேற்று முன்தினம் 62வது பழக்கண்காட்சி தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு பூங்கா நுழைவாயிலில் பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒரு டன் திராட்சை கொண்டு 12 அடி நீளம் 9 அடி உயரத்தில் கழுகு அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

பல்வேறு வகையான பழங்களால் பல அலங்காரங்கள் வைக்கப்பட்டிருந்ததை சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர். பழக்கண்காட்சியின் கடைசி நாள் நேற்று. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கே பல்வேறு வகையான அலங்காரங்கள் வைக்கப்பட்டிருப்பதை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டனர். பழக்கண்காட்சி நிறைவு நாளான நேற்று சிறந்த அலங்காரங்களுக்கு சுழல் கோப்பை வழங்கும் விழாவானது பூங்காவில் நடைபெற ஆட்சியர் தலைமை தாங்கி 102 பேருக்கு சூழல் கோப்பையை வழங்கினார்.

Categories

Tech |