Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கலை நிகழ்ச்சியை பார்க்க சென்ற சிறுவன்…. மகனை கண்டித்த பெற்றோர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெம்லிப்பட்டி கிராமத்தில் குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயவேந்தன்(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உதயவேந்தன் அப்பகுதியில் நடந்த ஆடல், பாடல் கலை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனை அறிந்த உதயவேந்தனின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |