Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! அந்தஸ்து உயரும்..! நல்லது நடக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் கல்யாண முயற்சிகள் கைகூடும் நாளாக இருக்கிறது.

திருமணத்திற்காக அதிக நாள் வரன் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் நாளாக இருக்கிறது.
இன்று உங்கள் குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். சகோதர சகோதரர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கேட்டு செய்வீர்கள். இன்று உங்களுக்கு பயணங்கள் வர வாய்ப்பு உள்ளது. பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. அதிக பணத் தொகையை நீங்கள் பயணத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டாம். இன்று நீங்கள் வாக்குறுதிகளை காப்பாற்ற வழிபாடுகள் தேவைப்படும்.

இறைவனை நீங்கள் பரி பூரணமாக நம்பி எதையும் செய்ய பாருங்கள். உங்களின் மனசுக்கு கண்டிப்பாக நல்லதே நடக்கும். இருந்தாலும் எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டாதீர்கள். நல்ல காரியங்கள் செய்வதன் மூலம் நீங்கள் மதிப்பையும் மரியாதையும் பெற்றுக் கொள்வீர்கள்.
இன்று நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் நண்பர்கள் உறவினர்கள் மூலம் உங்களுக்கு கிடைக்கும். அடுத்தவர் செய்யும் தவறுகளை மன்னித்து நீங்கள் அதனால் நல்ல பெயர் எடுப்பீர்கள்.
இன்று உங்களுக்கு திடீர் பணத் தட்டுப்பாடு வர வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். இன்று உங்களுக்கு யோசனை அதிகமாக இருக்கும், சிந்தனை திறனும் அதிகமாக இருக்கும், கற்பனை வளமும் அதிகமாக இருக்கும், கனவுத் தொல்லையும் அதிகமாக இருக்கும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினை இல்லாத சூழல் ஏற்படும். இருந்தாலும் நீங்கள் சில பிரச்சினைகளை ஊதிப் பெரிதாக்க வேண்டாம். சுமூகமாக முடித்துக் கொள்ளப் பாருங்கள். இன்று பிள்ளைகளின் நலன் கருதி நீங்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். காதலில் உள்ள பிரச்சினைகளும் சரியாகிவிடும். மன வருத்தங்களுக்கு இன்று உங்களுக்கு தீர்வு கிடைக்கும். மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
நீங்கள் பாடங்களை படித்த பின்பு எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் முருகப் பெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பயனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்1 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் நீலம் நிறம்.

Categories

Tech |