மகரம் ராசி அன்பர்களே…!
இன்று யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட கூடிய நாளாக இருக்கிறது.
யாரிடமும் பகை பாராட்டாமல் பக்குவமாக நடந்து கொள்வது மிகவும் சிறந்தது.
தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உங்களுக்கு ஒரு துணை புரிவார்கள்.
குடும்பத்தாரும் உங்களுக்கு ஒரு துணை புரிவார்கள். இன்று சமூகத்தில் உங்கள் கவுரவம் மற்றும் அந்தஸ்து உயரும்.
நீங்கள் வீண் அலைச்சலை தயவுசெய்து தவிர்க்கப்பாருங்கள். பயணத்தின் பொழுது பக்கத்தில் இருப்பவர்களிடம் பேச்சுக் கொடுக்க வேண்டாம்.
குடும்பத்தைப் பொறுத்தவரை பிரச்சினைகள் எதுவும் இல்லை சிறப்பாக இருக்கிறது. மகிழ்ச்சிக்கு குறைவில்லை.
இன்று நீங்கள் மன தைரியத்தை வளர்த்துக் கொண்டு எடுத்த காரியத்தை சிறப்பாக முடிப்பீர்கள். இன்று நீங்கள் வெற்றிகரமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உங்களின் நல்ல மனதிற்கு நல்லது மட்டுமே நடக்கும்.
உங்கள் நல்ல செயல்களின் மூலம் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்.
இன்று உங்களுக்கு பண வரவு குறைவின்றி வந்து சேரும். சிலருக்கு வீடு மாற்றங்கள் ஏற்படக்கூடும். வாகன மாற்றங்கள் பற்றிய சிந்தனையும் உங்களுக்கு இருக்கிறது.
பெற்றோர்களை மதித்து நடப்பது சிறந்தது. பெற்றோரின் உடல்நிலையில் கவனம் தேவை. சொந்த பந்தங்கள் உங்களுக்கு ஆதரவாக தான் இருப்பார்கள். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். செய்கின்ற வேலையை நீங்கள் சிறப்பாக செய்யப்பாருங்கள். இந்த உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது பண தேவைகள் ஓரளவு பூர்த்தி அடையும். கடன் பிரச்சினைகள் கூட உங்கள் கட்டுக்குள் இருக்கும். இன்றைய நாள் உங்களுக்கு உன்னதமான சூழ்நிலையே அமையும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். காதலில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் காதல் கசக்கும் படியாகத் தான் இருக்கும். மாலை நேரத்திற்கு பின் எல்லா பிரச்சினைகளும் சரியாகிவிடும். முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது நீங்கள் வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இந்த நீங்கள் முருகப் பெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை வட மேற்கு.
அதிர்ஷ்டமான எண் 4 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் நீலம் நிறம்.