குரூப் 4 முறைகேட்டில் தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குரூப்-4 முறைகேடு தொடர்பாக காவலர் சித்தாண்டியை சிபிசிஐடி தேடிவந்தனர். இந்நிலையில் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலர் சித்தாண்டி சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சித்தாண்டியின் சகோதரர் வேல்முருகனிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது.
ஆயுதப் படையில் பணியாற்றி வரும் சித்தாண்டி தற்போது மருத்துவ விடுப்பில் இருக்கிறார். சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சித்தாண்டியிடம் CBCID போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். சித்தாண்டியின் குடும்பம் தலைமறைவாகியுள்ள நிலையில் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.