நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு CUET பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய பல்கலைக்கழகம் தவிர மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் செய்வோரும் இந்த தேர்வுக்கு எழுத விண்ணப்பிக்கலாம். ஜூலை மாதத்தில் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு 13 மொழிகளில் கணினி வழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் CUET இளங்கலை பொது தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31-ஆம் தேதி தான் கடைசி நாள் ஆகும். அதன்படி இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், கட்டணம் செலுத்தாதவர்கள்,விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய நினைப்போர் மற்றும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி https://cuet.samarth.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.