தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டது. தற்போது 1 முதல் 9 மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றுடன் பொதுத்தேர்வு நிறைவடைகிறது.
இதையடுத்து நாளை முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. மேலும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு பன்னிரண்டாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.