Categories
மாநில செய்திகள்

மீண்டும் பல்க் புக்கிங் சேவை…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் பல்க் புக்கிங் சேவையை தெற்கு ரயில்வே மீண்டுமாக நடைமுறைபடுத்தி இருக்கிறது.

விரைவு இரயில்களில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கு ஏற்ப தெற்குரயில்வேக்கு உட்பட்ட 6 கோட்டங்களில் 200-க்கும் அதிகமான டிக்கெட் முன்பதிவு மையங்கள் இருக்கின்றன. இணையதள வசதியுடன் கூடிய மொபைல்போன் வசதி மக்களிடம் அதிகரித்துள்ள சூழ்நிலையிலும், இன்னும் 25 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு மையங்களையே நம்பி இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக பல்க் புக்கிங் எனப்படும் அதிக எண்ணிக்கையிலான பயணியர், குழுவாக பயணம் செய்ய முன்பதிவு மையங்களில் மட்டுமே டிக்கெட் எடுக்க முடியும். கொரோனா தாக்கத்தின்போது இந்த சேவை நிறுத்தப்பட்டது.

தற்போது கொரோனா தாக்கம் குறைந்து உள்ளதால் பல்க் புக்கிங் சேவை, ரயில்களில் ஏறும் இடங்களை மாற்றி அமைத்தல் ஆகிய வசதிகள் நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இது தொடர்பாக பயணியர் சிலர் கூறியிருப்பதாவது “திருமணம், கோவில், சுற்றுலா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு குழுவாக போக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் இருந்தது. தற்போதைய வசதியின் மூலம் 30-க்கும் மேற்பட்டோர் ஒரேசமயத்தில் டிக்கெட் முன் பதிவு செய்து பயணிக்க முடியும். ரயில்வே இச்சேவையை மீண்டும் கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது” என்று அவர்கள் கூறினர்.

Categories

Tech |