நம் எல்லோரிடமும் வங்கிக் கணக்கு இருக்கும். அதிலும் ஏதாவது ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்போம். அந்த வங்கியில் வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனை தொடர்பான சில கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் இருக்கின்றது. ஆனால் அது நிறைய பேருக்கு தெரிவதில்லை. அது தெரியாமல் அளவிற்கு அதிகமாக பணம் அனுப்புவது, ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது பிரச்சினைகளை சந்திப்பார்கள். அதனால் வங்கி பரிவர்த்தனை தொடர்பான விதிமுறைகள் பற்றி முன்பே தெரிந்து வைப்பது மிகவும் நல்லதாகும்.
பேங்க் ஆஃப் பரோடா வங்கி வாடிக்கையாளர்களின் யூபிஐ தொடர்பான சில விதி முறைகளை இங்கே காணலாம். இந்த வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு நாளில் அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் மட்டுமே அனுப்ப முடியும். மேலும் பரிவர்த்தனை ஒன்றுக்கு அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய்தான் 24 மணி நேரத்தில் மொத்தம் பத்து பரிந்துரைகள் மட்டுமே மேற்கொள்ளமுடியும். பேங்க் ஆப் பரோடா யுபிஐ பின் நம்பர் ஒருவேளை நீங்கள் மாற்றிவிட்டால் அடுத்த 24 மணி நேரத்திற்கு உங்களால் 50,000 ம் ரூபாய் மட்டுமே அனுப்ப முடியும்.
அதேபோன்று ஒரே ஒரு பரிவர்த்தனைக்கு மட்டுமே அனுமதி மேற்கூறிய பரிவர்த்தனை கட்டுப்பாடுகள் பணம் அனுப்புவதற்கு மட்டுமே பொருந்தும். மேலும் பில் கட்டணம் செலுத்துவது போன்ற வணிகப் பயன்பாட்டுக்கான பரிவர்த்தனைகள் பொருந்தாது. இதுபோல ஒவ்வொரு வங்கிக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனை வரம்பு இருக்கும். அது பற்றி தெரிந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு தங்குதடையின்றி பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.