Categories
உலக செய்திகள்

“மக்கள் தொகை சரிவில் பிரபல நாடு”… குழந்தை பெற்றுக் கொள்வதில் குறையும் ஆர்வம்…. காரணம் என்ன…?

உலகிலேயே மக்கள் தொகையில் முதலிடத்தில் சீனா உள்ளது. உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு சீனாவில் தான் இருக்கின்றது. மேலும் 40 வருடங்களுக்கு  முன்பாக சீனாவில்  மக்கள் தொகை 66 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது 140 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 1959 முதல் 1961 ஆம் வருடம் வரை பஞ்சம் காரணமாக சீனாவின் மக்கள் தொகை குறைந்தது. அதன் பின் முதல் முறையாக இந்த வருடம் மக்கள் தொகை சரிவு பாதையில் செல்லத் தொடங்கி இருக்கின்றது.

சீனாவின் தேசிய புள்ளியல் பிரிவின் கணக்குப்படி சீன மக்கள் தொகை 141 கோடியே 21 லட்சத்து 20 ஆயிரத்தில் இருந்து 141 கோடியே 26 லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது ஒரு வருடத்தில் மக்கள்தொகை வெறும் 4 லட்சத்து 80 ஆயிரம் மட்டுமே உயர்ந்துள்ளது. கடந்த ஆயிரம் வருடங்களில் மிகவும் குறைவாக வெறும் 0.34 சதவீதம் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பெல்லாம் ஆண்டிற்கு ஒரு முறை மக்கள் தொகை 80 லட்சத்திற்கும் மேல் அதிகரிக்கும். ஆனால் தற்போதைய வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கிறது.

கொரோனா  கட்டுப்பாடு போன்ற காரணங்களால் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் குறைந்தது தான் இதற்கு காரணம் என கருதப்படுகின்றது. 1980களில் ஒரு பெண்ணிற்கு 2.6 என்ற அடிப்படையில் குழந்தைபிறப்பு விகிதம் இருந்துள்ளது. ஆனால் தற்போது 1.15 ஆக குறைந்திருக்கிறது. ஒரே குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற  கொள்கையை கடந்த 2014ஆம் வருடம் சீனா கைவிட்டது. மேலும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் வரிச் சலுகைகளும், ஊக்கத்தொகையும் கடந்த ஆண்டு அறிவித்துள்ளது.

இருந்தபோதிலும் சிறு குடும்ப முறைக்கு  மக்கள் பழகிய உடன், வாழ்க்கை செலவை அதிகரித்ததும், திருமண வயது அதிகரித்ததால் குழந்தை பிறப்பைத் தள்ளிப் போனதும், குழந்தை பெற்றுக்கொள்ள வயது பெண்கள் குறைவாக இருப்பதும் மக்கள் தொகை சரியத் தொடங்கி இருப்பதற்கான முக்கிய காரணங்களாகும். மேலும் 1980 களில் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ளும் கொள்கையை சீனா  அறிவித்தவுடன் ஆண் குழந்தை பெற்றுக் கொள்வதில் பெண்கள் மிகவும் ஆர்வம் காட்டினர். இதனால் 100 பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகள் என்ற வீதம் 120 ஆண் குழந்தைகள் ஆக அதிகரித்துள்ளது. ஆனால் ஆண்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இதனால் சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் 2030ஆம் வருடத்திற்குள் ஒரு பெண்ணுக்கு 1.5 லிருந்து 1.1 குறையும் எனவும் 2100 ஆம் ஆண்டு வரை இதே நிலை தொடரும் எனவும் கணிக்கப் பட்டிருக்கிறது. மேலும் பணிபுரியும் மக்கள் தொகை 2100 ஆம் ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்து விடும் எனவும் மூத்த குடிமக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அதன் காரணமாக சீன பொருளாதாரம் பாதிக்கப்படும் எனவும் கருதப்படுகிறது.

Categories

Tech |