புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை விரைவில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் நிசான் நிறுவனம் அறிமுகபடுத்தவுள்ளது.
ஆட்டோமொபைல் நிறுவனமான நிசான் ஜப்பான் நாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் புதிய சப்- காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை விரைவில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘மேக் இன் இந்தியா மேக் ஃபார் இந்தியா’ என்ற திட்டத்தில் புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. ‘மே க் உருவாக்கப்படும் என நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, ஃபோர்டு மற்றும் ஹூண்டாய் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது . இந்த புதிய மாடல் அதிக போட்டியை சந்திக்க நேரிடும் என நிசான் நிறுவனத்தினர் கருதிகின்றனர்.
மேம்பட்ட தொழில்நுட்பத்தில் நிசான் சர்வதேச எஸ்.யு.வி. பாரம்பரியத்தை பின்பற்றியே புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. உருவாக்கப்படும் என நிசான் தெரிவித்துள்ளது . அதை தொடர்ந்து புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி கார் நிசான் இன்டெலிஜன்ட் மொபிலிட்டியின் அங்கம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் நிறைந்த மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிசான் நிறுவனம் மைக்ரா ,கிக்ஸ், சன்னி, டெரானோ,மைக்ரா ஆக்டிவ், மற்றும் ஜி.டி.-ஆர் போன்ற மாடல்கள் இந்திய சந்தையில் தற்சமயம் விற்பனை செய்து வருகிறது.