Categories
உலக செய்திகள்

தொடரும் போர் பதற்றம்!…. ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எடுத்த அதிரடி முடிவு…..!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நீடித்து வருகிறது. இப்போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ராணுவ வீரர்கள் இறந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அது தோல்வியில் முடிந்தது. இதனிடையில் போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்காவும், ஐரோப்பியநாடுகளும் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. இதற்கிடையே போரில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்துவரும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான பல பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த அடிப்படையில் ரஷ்யாவின் நிறுவனங்கள் தங்களது நாடுகளில் செயல்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தடைவிதித்து வருகிறது. எனினும் ஐரோப்பாவின் எரிபொருள் தேவை பெரும்பாலும் ரஷ்யாவை சேர்ந்தே இருக்கிறது. ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தங்களது நாட்டிற்கு தேவையான 35 சதவிதத்திற்கும் அதிகமான எரிபொருளை ரஷ்யாவிடம் இருந்தே பெறுகிறது. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரதடைகள் ரஷ்யாவின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்தநிலையில் ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் கச்சா எண்ணெய்யில் 90 சதவிகிதத்தை நிறுத்துவதற்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளானது முடிவு செய்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்யில் 90 சதவிகிதத்தை நிறுத்த ஐரோப்பிய யூனியன் முடிவு செய்து இருக்கிறது. பெல்ஜியத்தில் இன்று நடந்த ஐரோப்பியயூனியன் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவு பற்றிய அறிவிப்பு வெளியாகிய சிலமணி நேரங்களில் ஐரோப்பிய சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

Categories

Tech |