பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், என் உடைகளை விற்று, தன் மக்களுக்கு குறைந்த விலையில் கோதுமை மாவு அளிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அங்கு இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் பணவீக்கம் அதிகரித்து கொண்டிருக்கிறது. எனவே, உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி பாகிஸ்தான் நாட்டில் கோதுமை மாவு அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர், ஒரே நாளில் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட வேண்டும். இல்லையெனில், என் உடைகளை விற்று மக்களுக்கு குறைந்த விலையில் கோதுமை மாவு அளிக்க ஏற்பாடு செய்வேன் என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, முன்னாள் பிரதமரான இம்ரான்கான் இதற்கு முன்பு இல்லாத வகையில் பண வீக்கத்தையும், வேலையில்லா திண்டாட்டத்தை யும் நாட்டிற்கு பரிசாக கொடுத்திருக்கிறார் என்று கூறினார்.
மேலும், என் உயிரைக் கொடுத்தேனும் பாகிஸ்தானை வளர்ச்சி மற்றும் செழிப்பான பாதையில் எடுத்துச் செல்வேன் என்பதை உங்களின் முன்பு உறுதியாக கூறுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.