நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சென்ற 13ம் தேதி வெளியாகிய படம் ‘டான்’ ஆகும். அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.
இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்து இருந்தார். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் சூரி, சமுத்திரக்கனி, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உட்பட பலர் நடித்து இருந்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த படம் வெளியாகிய 12 நாட்களில் ரூபாய் 100 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில் “டான்” படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில் “டான்” திரைப்படம் வருகிற ஜூன் 10ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.