Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கறி விருந்து…. “கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 70 பேருக்கு வாந்தி, மயக்கம்”…. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை….!!!!

கறிவிருந்து சாப்பிட்ட கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 70 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகில் மேலந்தல் கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் தற்சமயம் கரும்பு வெட்டும் சீசன் முடிந்து விட்டதால் அதை கொண்டாடுகின்ற வகையில் தொழிலாளர்கள் சுமார் 100 பேர் கடந்த 28-ஆம் தேதி அதே கிராமத்தில் ஒன்று திரண்டு கோழி கறி விருந்து வைத்து சாப்பிட்டார்கள். அதன்பின் அன்று இரவு முதல் கறி விருந்து சாப்பிட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் சுமார் 70 பேருக்கு வாந்தி மயக்கம், வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. உடனே அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணலூர்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திருவண்ணாமலை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த மணலூர்பேட்டை காவல் துறையினர் அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கறி விருந்து சமைப்பதற்கு அருகிலிருந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்தது தெரியவந்துள்ளது. சுகாதாரமற்ற தண்ணீரை பயன்படுத்தி உணவு சமைத்து சாப்பிட்டதால் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதை தவிர வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |