Categories
சினிமா தமிழ் சினிமா

“வாழையடி வாழையென வளரும் தமிழ் கூட்டம்”…. வைரமுத்துவின் வைரலான பதிவு…!!!!!

தமிழ் திரைப்பட உலகில் புகழ்பெற்ற பாடலாசிரியராக திகழ்ந்து வருபவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் என்னும் படத்தில்  பொன்மாலைப்பொழுது என்ற பாடல் மூலமாக இவர் அறிமுகமாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் பாடல்கள் எழுதி அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் இதுவரை 7,500 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கின்றார். இவர் சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஆறு முறை பெற்றுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழாற்றுப்படை என்ற புத்தகத்தை கவிஞர் வைரமுத்து வெளியிட்டார்.

தமிழ் மூவாயிரம் ஆண்டுக்கால பெருமைகளை கூறி தமிழில் நோக்கி கேட்பவர்களை, வாசிப்பவர்களை ஆற்றுப்படுத்தும் என்ற நம்பிக்கையால் வைரமுத்து எழுதிய இந்த புத்தகம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்த புத்தகத்தை படித்த ரஜினி காந்த்  வைரமுத்துவை  பற்றி புகழ்ந்திருக்கின்றார். இந்த நிலையில் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை புத்தகத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மகன் மாவீரன் இந்த புத்தகத்தை படிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இது பற்றி வைரமுத்து இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில்

“காளிமுத்து பேரன்
செந்தமிழன் சீமானின்
திருச்செல்வன் மாவீரன்
தமிழாற்றுப்படையோடு
உறவாடி விளையாடும்
ஒளிப்படங்கள் கண்டேன்
நாளையொரு பூமலர
நல்லதமிழ்த் தேன்சிதற
வாழையடி வாழையென
வளருமடா தமிழ்க்கூட்டம்
என்று வாய்விட்டுச்
சொல்லிக்கொண்டேன்
தமிழாற்றுப்படையோடும்
தமிழர் படையோடும்
வா மகனே”
என பதிவிட்டுள்ள வைரமுத்துவின் இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |